பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' சந்தேகம் அழைப்புகள்  அதிகரிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையத்துக்கு, கடந்த ஒன்பது நாட்களில், 247 அழைப்புகள் பதிவாகியுள்ளன.பேரிடர் மேலாண்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் இணைந்து, 24 மணி நேரம் சுழற்சி முறையில் இம்மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஆரம்பத்தில் குறைவான அழைப்புகளே பதிவான நிலையில், தற்போது அழைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கடந்த 16 முதல் 21 வரை, 71 அழைப்புகளும், 22ம் தேதி 38ம், 23ம் தேதி 59ம், மற்றும் நேற்று மாலை வரை, 79 உட்பட, 247 அழைப்புகளும் பதிவாகியுள்ளன.கொரோனா சார்ந்த சந்தேகம் கேட்கவும், அண்டை வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களின் விபரங்களை கேட்கவும், விதிமுறை மீறல் புகார், என பல பிரிவுகளில் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X