பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் துவங்கியாச்சு: கொரோனா கட்டுப்பாட்டு அறை

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. உதவி தேவைப்பட்டால், 0422 - 230 2323 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.நேற்று மாலை, 6:00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும், படிப்படியாக மூடப்பட்டன. ஆங்காங்கே மருந்தகங்கள் மட்டும் செயல்படுகின்றன. பொதுமக்கள், பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கும்படி, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.அம்மா உணவகம் செயல்படும்கோவை மாநகராட்சி பகுதியில், அரசு மருத்துவமனை வளாகம், ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட், சிங்காநல்லுார், குனியமுத்துார், கோவைப்புதுார், போத்தனுார், மணியகாரம்பாளையம், சரவணம்பட்டி, மசக்காளிபாளையம், சாயிபாபா காலனி, ராமநாதபுரம், திருமால் வீதி ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படும்.குறைந்த விலையில், மூன்று வேளையும் உணவு பெற்றுக் கொள்ளலாம் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X