பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவால் நகரில் இயக்கம் முடக்கம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், 144 தடை உத்தரவு காரணமாக, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி, இயல்பு வாழ்க்கை முடங்கியது.உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த, 3 நாட்களாக, மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.தமிழகத்தில், கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், நேற்று மாலை, 6:00 மணி முதல் மார்ச் 31 வரை, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று காலை முதலே, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க, மக்கள் திரண்டதால், அனைத்து கடைகளும் நிரம்பி வழிந்தது.இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணி முதல், மளிகை கடை, மருந்து கடை, காய்கறி கடைகளை தவிர, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.பஸ், ஆட்டோ, வடகை கார் ஆகியவற்றின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. போலீசார் மற்றும் வருவாய் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X