சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயில் கருகிய செடிகளை உயிர்ப்பிக்க வனத்துறை தீவிரம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 தீயில் கருகிய செடிகளை உயிர்ப்பிக்க வனத்துறை தீவிரம்

பொன்னேரி:அரசு பள்ளி வளாகத்தில் வளர்க்கப்பட்டு வந்த செடிகள், தீ விபத்தில் கருகியதை தொடர்ந்து வனத்துறையினர், அதை உயிர்ப்பிக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை அண்ணா நகர் வனச் கரகம் மூலம், வனத்துறையினர் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், பயன்பாடு இன்றி கிடந்த இடங்களை சுத்தப்படுத்தி, அங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.ஊட்ட சத்துவேம்பு, புங்கன், மகாகனி, நாவல், பூவரசு, குல்மோர், பெல்டாபாரம் என, 20க்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், தினமும் செடிகளுக்கு இடையே உள்ள களைகளை அகற்றுவது, தண்ணீர் ஊற்றுவது என, தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பொன்னேரி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் செடிகளின் அருகில் இருந்த காய்ந்த சருகுகளால் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தால், நன்கு வளர்ந்திருந்த செடிகள் தீயில் கருகின. அதே சமயம் அவற்றின் வேர்களில் பாதிப்பு இல்லை என்பதால், அதை உயிர்ப்பிக்கும் பணிகள் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.நீர்நிலைகளில் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றியும், தேவையான ஊட்ட சத்துக்களை கொடுத்தும் வருகின்றனர்.துளிர் விடும்இதற்காக, பொன்னேரி அடுத்த, பொன்நகர் பகுதியில் உள்ள கால்வாய் நீரினை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்து வந்து செடிகளுக்கு பாய்ச்சுகின்றனர்.அடுத்த சில தினங்களில், செடிகளில் மீண்டும் துளிர் விட்டுவிடும் எனவும், வனத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X