பொது செய்தி

தமிழ்நாடு

பெண் வண்டு 'வாசனை'யில் மதிமயங்கும் ஆண் வண்டுகள்: தென்னையை காக்க ஐடியா

Added : மார் 25, 2020
Share
Advertisement
 பெண் வண்டு 'வாசனை'யில் மதிமயங்கும் ஆண் வண்டுகள்: தென்னையை காக்க ஐடியா

திருப்பூர்:தென்னந்தோப்பில், வெள்ளை சுருள் ஈ பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கும் நிலையில், கூன் வண்டு பாதிப்பு, மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.மரத்தில் ஓட்டையை ஏற்படுத்தி, அதன் வழியாக கழிவுகளை வெளியே தள்ளிவிட்டு, மென்மேலும் பெருகி, மரத்தையே சாய்த்து விடுகின்றன.
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் பிரிவு அதிகாரி தனசேகர பாண்டியன் கூறியதாவது:கூன் வண்டுகளால், தென்னை மரத்துக்கு பெரிய ஆபத்து வரும். விளக்கு பொறி வைத்து, வண்டுகளை பிடித்து அழிக்கலாம். அல்லது, பாத்திரம் அல்லது பெரிய பானையில், அழுகிய பழங்களை கரைத்து, தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.அப்போது, வாசனைக்கு வரும் வண்டுகள், தண்ணீரில் விழுந்து இறக்கும். இத்தகைய வழிமுறைகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது, 'பெர்ரோ லுார்' என்ற புதிய தொழில்நுட்பம், கூன் வண்டு பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
அதாவது, பெண் வண்டின் வாசனையுடன் கூடிய, 'பெர்ரோ லுார்' கருவியை வைத்தால், ஆண் வண்டுகள் பொறியில் சிக்கிவிடும். இதன்மூலம் ஆண் வண்டுகளை அழித்தால், இனப்பெருக்கத்தை குறைத்து, தென்னந்தோப்புகளை காப்பாற்றலாம்.மேலும், உரமருந்து கடையில், 'கார்பைரில் 1%என்ற மருந்தை வாங்கி, வண்டுகள் உருவாகிய மர ஓட்டைகளில் தெளித்தும், கட்டுப்படுத்தலாம். விவசாயிகள், ஆரம்ப கட்டத்திலேயே இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கையை கையாள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X