பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களை பரிசோதிக்க முகாம் ஏற்படுத்த கோரிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி:சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தி, வடமாநில தொழிலாளர்களை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். அவற்றில், பீஹார், ஓடிசா, மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.அவர்கள், கும்மிடிப்பூண்டி, புதுகும்மிடிப்பூண்டி, சித்தராஜகண்டிகை, பாப்பாங்குப்பம், ஓபுளாபுரம், ஈகுவார்பாளையம், சிறுபுழல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடனும், சக தொழிலாளர்களுடன் வசித்து வருகின்றனர்.மேற்கண்ட வடமாநிலங்களில், கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 20 நாட்களில், அங்கிருந்து புதிதாக வந்தவர்கள், ஊருக்கு சென்று திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.அதற்காக, மாவட்ட சுகாதார துறையினர் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தி அவர்களை பரிசோதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X