'டவுன் சர்வே' நோட்டீசில் குழப்பம்: பொதுமக்கள் திணறல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:நகர மறு அளவை அறிவிப்பு நோட்டீசில் உள்ள அளவை, சதுர அடிக்கு மாற்றி, ஒப்பிட்டு சரிபார்க்கலாம் என, மாவட்ட நில அளவை பிரிவு அறிவித்துள்ளது.நில அளவைத்துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சி எல்லையில், நகர மறு அளவை பணி நிறைவு பெற்றுள்ளது. நகர வார்டுகளில் உள்ள, மனை, வீடு உரிமையாளர்களுக்கு, அதற்கான நோட்டீஸ் வினியோகம் நடந்து வருகிறது.நகர மறு அளவை பிரிவில் இருந்து, ஒவ்வொரு உரிமையாளருக்கும், நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 58 ஆயிரத்துக்கும் அதிகமான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிமையாளர் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.உரிமையாளர் பெயர், சொத்து பரப்பளவில் மாறுதல் இருந்தால், உடனடியாக மறு அளவை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய நோட்டீசை திருத்தம் செய்ய, ஆதார், சொத்து பத்திரம், வில்லங்க சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன், கலெக்டர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கின்றனர்.கலெக்டர் அலுவலகத் தின், ஐந்தாவது தளத்தில், நகர மறு அளவை அலுவலகம் உள்ளது. நோட்டீஸ் அனுப்பும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், 'ெஹக்டர் - ஏர்ஸ்', சதுர மீட்டர் என்ற பல அளவுகளில், நோட்டீஸ் வழங்கியுள்ளதால், அந்த விவரம் தெரியாமல், பொதுமக்கள் திக்கு முக்காடி வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சொத்து பத்திரங்களில், பெரும்பாலும், சதுரடி அளவுதான் குறிப்பிடப்படுகிறது. சர்வே ஆவணங்களில், சதுர மீட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ெஹக்டர், ஏர்ஸ் என, பல அளவுகளில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், பத்திரத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்க இயலவில்லை. குழப்பமாக உள்ளது. எனவே, இனிமேல், சதுர அடி கணக்கில் அளவுகளை குறிப்பிட வேண்டும்' என்றனர்.இதுகுறித்து சர்வே பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ''நகர மறு அளவை அறிவிப்பு நோட்டீசில், சதுர மீட்டர் அளவுகளில் குறிப்பிட்டுள்ளோம். பொதுமக்கள் எளிதாக, சதுர அடி கணக்கில் மாற்றி சரிபார்க்கலாம். ஒரு சதுர மீட்டர் என்பது, 10.764 சதுர அடி.நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள, சதுர மீட்டர் அளவை, 10.764 ஆல் பெருக்கினால், சதுர அடி அளவு கிடைக்கும். அதைக்கொண்டு, சரிபார்க்கலாம். திருத்தம்தேவையெனில், தகுந்த ஆவணங்களுடன், நில அளவை பிரிவு அலுவலகத்தை அணுகலாம்' என்றனர்.நில அளவுகளை தெரிஞ்சுக்கலாம்!ஒரு ெஹக்டர் - 2.47 ஏக்கர் அல்லது 10,000 சதுர மீட்டர். ஒரு ஏக்கர் - 43,560 சதுர அடி. ஒரு சென்ட் - 435.6 சதுர அடி அல்லது 40.50 சதுர மீட்டர். ஒரு சதுர மீட்டர் - 10.764 சதுர அடி. ஒரு ஏர்ஸ் - 1,076 சதுர அடி அல்லது 2.47 சென்ட் இதுபோன்ற அளவுகள் தான், சமீப காலங்களில் நில அளவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X