பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சம் துளியும் இல்லை...

Added : மார் 25, 2020
Share
Advertisement

கடலுார் : 'கொரோனா வந்தாலும் பரவாயில்லை, 'சரக்கு' தான் முக்கியம்' என, கடலுார் 'டாஸ்மாக்' கடைகளில், குடிமகன்கள் வரிசைக்கட்டி நின்று, சரக்குகளை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, நேற்று மாலை 6:00 மணி முதல் 31ம் தேதி வரையில், 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் உள்ள கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அந்த வகையில் நேற்று மாலை 6:00 மணிக்கு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இதை முன்கூட்டியே அறிந்த குடிமகன்கள் சரக்கு வாங்கி ஸ்டாக் வைக்க முடிவு செய்தனர்.

நேற்று காலை டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே கடைகளின் முன்பு தயாராக காத்திருந்தனர். கடை திறந்ததும் முண்டியடித்து சரக்குகளை மொத்தமாக வாங்கி சென்றனர். சிலர் வானங்களில் பெட்டி பெட்டியாக ஏற்றியும் சென்றனர். கடலுார் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் முன்பு 1 மீட்டர் இடைவெளி கோடு போட்டு வரிசையாக வரும்படி கூறியும், அதை யாரும் பொருட்படுத்தவில்லை. கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலையில், கடை விற்பனையாளரும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.

உலகம் முழுவதும் மக்களிடையே பெரிய அளவில் பீதியை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சிறிது கூட கவலைப்படாமல், 'சரக்கு' மட்டும் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில், குடிமகன்களின் செயல்பாடு இருந்தது. சிதம்பரம்: சிதம்பரத்தில் பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடி பிரியர்கள் முன் டியடித்து சரக்கு வாங்க குவிந்தனர். பல இடங்களில் சரக்கு வாக்குவதில் தகராறு ஏற்பட்டது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கட்டுக் கடங்காத கூட்டம் சரக்கு வாங்க குவிந்ததால் போலீசார் விரட்டி அடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X