பொது செய்தி

தமிழ்நாடு

மாடுகளுக்கு முருங்கை விவசாயிகள் 'ஐடியா'

Added : மார் 25, 2020
Share
Advertisement

பொங்கலுார்:மாசி, பங்குனி மாதங்கள் முருங்கை சீசன் காலம் ஆகும். தற்போது சீசன் களைகட்டி உள்ளதால் முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் முருங்கை விலையும் சரிந்து வருகிறது.விலை சரிந்தாலும் தங்களுக்கு கூலி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் காய்களைப் பறித்து விற்பனை செய்து வந்தனர்.தற்போது கொரோனா வைரஸ் குறித்த பீதி விவசாயிகள் மத்தியில் பரவ துவங்கியுள்ளது. இதனால், மார்க்கெட்டிற்கு காய்களைக் கொண்டு செல்வதில் விவசாயிகள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. இதனால், செடிகளில் காய்கள் அறுவடை செய்யாமல் தேக்கம் அடைந்துள்ளது. முருங்கைக்காய் வீணாவதை தவிர்க்க சில விவசாயிகள் காய்களை பறித்து ஆடு, மாடுகளுக்கு உணவாகக் கொடுத்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவுவதால், வெளியில் செல்லவே அச்சமாக உள்ளது. தற்போது வறட்சி காரணமாக பசுந்தீவனத்திற்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் செடிகளில் பறிக்காமல் உள்ள காய்களை ஆடு மாடுகளுக்கு உணவாகக் கொடுத்து வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X