சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம நபர்களால் வாலிபர் படுகொலை

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருமழிசை:திருமழிசை பகுதியில், மர்ம நபர்களால் வாலிபர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வெள்ளவேடு அடுத்த, திருமழிசை உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்தன், 38. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பகுதியில் நடந்து சென்றுஉள்ளார்.அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக முகம், கை, கால் என, அனைத்து இடங்களிலும் வெட்டியுள்ளது.இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த வெள்ளவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசார் கூறியதாவது:கொலை செய்யப்பட்ட ஆனந்தன் மீது, மூன்று கொலை வழக்குகள் உள்ளன. இவரை முன் விரோதம் காரணமாக யாரேனும் வெட்டி கொலை செய்திருக்கலாம்.இவரை கொலை செய்தது யார் என்பது குறித்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X