பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளருக்கு உணவு வசதி

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:தொழிற்சாலைகள் மூடப்படும் போது, வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாப்பாக தங்க வைத்து, உணவு வசதி செய்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பனியன் நிறுவனங்கள் மூடப்பட வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:நுாற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், சலவை, சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், சைசிங் மில்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும், தாங்களாக முன்வந்து மூடி, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.ஆலை பணியாளர்கள், பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது, சரியான பாதுகாப்பு செய்யப்படாதபட்சத்தில், நடவடிக்கை எடுக்கப்படும். முறையான பாதுகாப்பு செய்யாத ஆலைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும்.தங்களது தொழிலாளருக்கு, உணவு, தங்குமிட வசதியை செய்து கொடுக்க வேண்டும். தொழிலாளர், தங்கும் குடியிருப்பில் இருந்து வெளியே சென்றால் கண்காணிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு, அனைத்து நிறுவனத்தினரும், தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X