பொது செய்தி

தமிழ்நாடு

'சானிடைசர்', முக கவசத்துக்கு விலை நிர்ணயம்: அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை பாயும்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:மத்திய நுகர்வோர் அமைச்சகம், சானிடைசர் மற்றும் முககவசத்துக்கு விலையை நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மத்தியில் முக கவசங்களை அணியும் பழக்கம், சானிடைசர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், இவைகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்தது.
இரண்டு முதல், 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட முக கவசம், 50 ரூபாய்; 10 மி.லி., சானிடைசர், 200 ரூபாய் வரை விற்கப்பட்டது.இத்தகைய விற்பனையை தடுக்க, மருந்தக ஆய்வாளர்கள், மருந்துக்கடைகள் தோறும், ஆய்வு நடத்தினர். அதிக விலைக்கு விற்பனை செய்த மருந்துக்கடைகளுக்கு, 'சஸ்பென்ஷன்' வழங்கப்பட்டன. இவைகளின் விற்பனை விலையை நிர்ணயிக்க, 'நேஷனல் பார்மசூட்டிக்கல் பிரைசிங் அத்தாரிட்டி' நடவடிக்கை எடுத்தது.முகசவசம், ேஹண்ட் சானிடைசர் தயாரிப்பு நிறுவனங்களிடம் உற்பத்தி செலவு, சராசரி விற்பனை விலை உள்ளிட்ட விவரங்கள் அறிக்கையாக பெறப்பட்டு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில், மத்திய நுகர்வோர் அமைச்சகம், சானிடைசர் மற்றும் முக கவசத்துக்கு விலையை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருந்தக ஆய்வாளர்கள் கூறுகையில், '2 லேயர் முக கவசம், அதிகபட்சம், 8 ரூபாய்; மூன்று லேயர் முககவசம் அதிகபட்சம், 10 ரூபாய்; 200 மில்லி சானிடைசர் அதிகபட்சம், 100 ரூபாய்; மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் என் 95 முககவசம், கடந்த, பிப்., மாதம், 12ம் தேதிக்கு முன்னர் விற்ற விலையை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி மருந்துக் கடைகளில், அதிக விலைக்கு சானிடைசர், முககவசம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X