பொது செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நிறுத்தம்: கட்டுமான தொழிலாளர் சொந்த ஊர் பயணம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நிறுத்தம்: கட்டுமான தொழிலாளர் சொந்த ஊர் பயணம்

அவிநாசி:குடிசை மாற்று வாரியம் சார்பில், கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் பரவலால், சொந்த ஊர் திரும்பினர். இதனால், கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.வீடில்லாதோர், ஓடை புறம்போக்கில் வசிப்போர், தெருவோரம் மற்றும் சாலையோரம், வீடின்றி வசிக்கும் மக்களுக்கு, வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டும் பணி, அவிநாசி - சூளை, அணைப்புதுார் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.கட்டுமானப் பணியில், 90 சதவீதம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தான் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், அவரவர் சொந்த ஊருக்கு திரும்ப துவங்கியுள்ளனர். இதனால், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது.'கொரோனா பாதிப்பு குறைந்தாலும், பணிக்குத் திரும்பும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, தொற்று எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான், அவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர். இதனால் கட்டுமான பணி மேலும் தாமதமாகும்; திறப்பு விழாவும் தள்ளிப்போகும், என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X