தமிழ்நாடு

ரூ.150 கோடி! தினமும் ஆயத்த ஆடை உற்பத்தி பாதிப்பு:கொரோனாவால் முடங்கிய 'டாலர் சிட்டி'

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ரூ.150 கோடி! தினமும் ஆயத்த ஆடை உற்பத்தி பாதிப்பு:கொரோனாவால் முடங்கிய 'டாலர் சிட்டி'

திருப்பூர்:கொரோனாவால், தினமும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி முடங்கியுள்ளது; எட்டு லட்சம் தொழிலாளர் வருவாய் இழந்துள்ளனர்.திருப்பூரில், 2,500 ஆடை உற்பத்தி நிறுவனங்கள்; நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என, ஆடை உற்பத்திக்கான சார்பு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெற்று ஆடை தயாரிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி; 20 ஆயிரம் கோடி மதிப்பில் ஆடை உற்பத்தி நடக்கிறது. இந்த துறை சார்ந்து, நேரடியாகவும், மறைமுகமாகவும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த எட்டு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை ஆடை உற்பத்தியை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினமும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை உற்பத்தி முடங்கியுள்ளது.கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கொரோனாவால், இந்த ஆண்டு, திருப்பூரின் உள்நாட்டுக்கான கோடை கால ஆடை தயாரிப்பு முழுமையும் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நிறுவனங்களுக்காக தயாரித்த ஆடைகளை அனுப்ப முடியாமலும், ஏற்கனவே வழங்கிய ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவது.ஏப்., மாதம் தேடிவரும் குளிர் கால ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணை மாயமாவது ஏற்றுமதியாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. வர்த்தகத்தை இழந்து தவிக்கும் நிறுவனங்கள், வேலை இழந்து தவிக்கும் தொழிலாளரைபாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கை கொடுக்கவேண்டும் என்பது ஆடை உற்பத்தி துறையினர் அனைவரின் ஒருமித்த வேண்டுகோளாக உள்ளது.ரயில்வே ஸ்டேஷனுக்கு சீல்பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று ரயில்வே ஸ்டேஷன் நுழைவுவாயில் 'பேரிகார்டு' வைத்து மூடப்பட்டது. ரயில்வே போலீசார், ஆர்.பி.எப்., கட்டுப்பாட்டில், ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி உள்ளே வருபவர்களை, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஒரு லட்சம் பேர் வெளியேறினர்நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் பஸ் பிடிக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். மாலை பஸ் சேவை நிறுத்தும் வரை தொடர்ந்து கூட்டம் அதிகரித்திருந்து. பிற மாவட்டம், பிற கிளைகளை சேர்ந்த பஸ்கள் திருப்பூருக்கு அனுப்படவில்லை. பஸ்கள் குறைந்தளவு இயக்கப்பட்டதால், பயணிகள் தவித்தனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிராவல்ஸ் வேன்கள் பயணி ஒருவருக்கு, 300 முதல், 500 ரூபாய் கட்டணம் வசூலித்து அழைத்து சென்றன. பழைய, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 50க்கும் அதிகமான டிராவல்ஸ் இயக்கப்பட்டது. இரண்டு நாளில் மட்டும், ஒரு லட்சம் பேர் வெளியூர் சென்றிருப்பதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-202017:00:18 IST Report Abuse
ஆப்பு அதனால் என்ன?வீட்டிலேயே முடங்கி வயிறார சாப்புடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X