சம்பவம் செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement

விழுப்புரம் : 'விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலானதையொட்டி பொதுமக்கள், வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என கலெக்டர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அரசின் உத்தரவுபடி இன்று (நேற்று) மாலை 6.00 மணி முதல் வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6:00 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மக்கள் வீட்டிற்குள் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளிய வரக்கூடாது. \

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தோர் 139 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில், 26 பேர் 28 நாட்களைக் கடந்து விட்டனர். மீதி 113 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.மாவட்டத்தில், தனிமை வார்டு, 218 தனி படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. அதே போல் குவராண்டைன் வார்டாக 220 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

ஆரோவில் பகுதியில் இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், சீனா நாட்டில் இருந்து வந்துள்ளோர் 303 பேர் கண்டறிந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் 7,100 முகக்கசவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 6,100 பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 144 தடை உத்தரவை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். எஸ்.பி., ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா பி சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X