பொது செய்தி

தமிழ்நாடு

அமலுக்கு வந்தது 144 தடையுத்தரவு: கூட்டம் கூடினால், ஜெயில் நிச்சயம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா தடுப்புக்காக, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொது இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவை அமல்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நேற்று மதியம், 144 தடையுத்தரவை பிறப்பித்தனர். நேற்று மாலை, 6:00 மணி முதல் தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது.வரும் ஏப்., 1ம் தேதி காலை 6:00 மணி வரை, தடையுத்தரவு அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 144 தடையுத்தரவு அமலில் இருப்பதால், நான்கிற்கும் மேற்பட்டவர்கள், பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பொது மற்றும் தனியார் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் விஜயகார்த்தி கேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் உட்பட மூடப்பட வேண்டும். மளிகை, காய்கறி, பால், மருந்து மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் இயங்கும்.அரசு சலுகை வழங்கியுள்ள நிறுவனங்கள் மட்டும், விதிமுறைகளை பின்பற்றி இயங்கலாம். அரசு பஸ், வேன், டெம்போ உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் நிறுத்தம் செய்யப்படும். பால் வேன், மருந்து வாகனம் உள்ளிட்ட சில வகை வாகனங்கள் மட்டும் இயங்கலாம்.திருப்பூர் மாவட்டத்தில் தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளதால், பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களுடனான, போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், கேரள மாநிலம், கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட எல்லைகளை கொண்டுள்ளது. கேரளா மற்றும் பிற மாவட்டங்களுக்கான அனைத்து ரோடுகளும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு, கலெக்டர் அறிவித்துள்ளார்.ஐந்து குழுக்கள் அமைப்பு மாவட்டத்தில், கொரோனா பரவுவதை தடுக்க, தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிக்கும் குழு; துாய்மைப்படுத்துதல் மற்றும் தொற்று நீக்கும் குழு; பொது இடங்களில் சமூக விலகல் பின்பற்றலை கண்காணிக்கும் குழு; மருத்துவமனை தனிமைப்படுத்திய பிரிவு மற்றும் மருத்துவ உபகரணங்கள் பொறுப்பு குழு; ஊடக நிர்வாக குழு என, ஐந்து வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தாசில்தார்கள் பொறுப்புமாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், தாசில்தார்கள் தலைமையில், சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அடங்கிய, தனிமைப்படுத்தும் குழுக்கள் இயங்கி வருகின்றன.ரேஷன் கடை பகுதியை, உள்ளாட்சி அமைப்புகள், மூன்று மணி நேர இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். சுகாதாரத்துறை சார்பில், மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை அதிகாரிகள், சிகிச்சை முறையை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X