பொது செய்தி

தமிழ்நாடு

ஏஜென்டுகளிடம் தஞ்சம் புகும் வடமாநில தொழிலாளர்: கண்காணிப்பு கேள்விக்குறி

Added : மார் 25, 2020
Share
Advertisement

அவிநாசி:வேலையிழந்த வட மாநில தொழிலாளர்கள் பலர், சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில், தங்களை பணிக்கு அமர்த்திய ஏஜென்டுகளிடம் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களை பராமரிப்பதில், கண்காணிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த, பல ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலால், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அங்கு பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊருக்கு திரும்பினர். இருப்பினும், பலர் தங்களது சொந்த ஊருக்கு போக முடியாத நிலையில் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, திருப்பூரில் பணிபுரிந்த வந்த, உ.பி.,யை சேர்ந்த ஆறு தொழிலாளர்கள், கைகாட்டிப்புதுார், வாரச்சந்தை வளாகத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், தஞ்சம் புகுந்தனர்.இதையறிந்த அப்பகுதியினர், அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் அங்கு விரைந்த அவிநாசி பேரூராட்சி அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு உட்பட வசதிகளை ஏற்படுத்தி, அவர்களை கண்காணிக்கும் பொறுப்பை, ஏஜென்டிடம் ஒப்படைத்தனர்.இதேபோல், மாவட்டத்தின் பல இடங்களில் இத்தகைய பிரச்னை உள்ளது. தங்களிடம் தஞ்சம் புகும் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுப்பது, ஏஜென்ட்களுக்கு எந்த அளவு சாத்தியம் என்பது கேள்விக்குறியே. இதனால், அத்தகைய வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், தனிக்கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X