பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்குள் இருங்க; ஆட்டோவில் அறிவிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 வீட்டுக்குள் இருங்க; ஆட்டோவில் அறிவிப்பு

திருப்பூர்:கொரோனா தடுப்பு நடவடிக்கையில், 144 தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் நகர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரு வாரம் முன்னரே பள்ளி, கல்லுாரி உட்பட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடந்த வராம் பெரிய அளவிலான துணி கடை, நகை கடை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை மையங்கள் ஆகியன மூடப்பட்டன.பனியன் மற்றும் அதன் சார்பு உற்பத்தி தொழிற்சாலைகள் மூடுவது குறித்து நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டு, நேற்று முதல் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வந்தது.நேற்று மாலை 6:00 மணி முதல் மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால், வெளியூர் தொழிலாளர் பெருமளவு தங்கள் சொந்த ஊர் செல்ல புறப்பட்டு சென்றனர். இத னால் நேற்று முன்தினம் இரவு முதலே கிடைத்த பஸ்களில் ஏறி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் சென்றனர்.ஏறத்தாழ அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஒரு சில மட்டுமே செயல்பட்டன. அவற்றில், வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அவற்றிலும், வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கினர்.நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவது குறித்து, வருவாய்த்துறை சார்பில், ஆட்டோவில் ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X