பொது செய்தி

தமிழ்நாடு

2 நாளில், ஒரு கோடி ரூபாய்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் கடந்த இரு நாட்களில் ஒரு கோடியே, 14 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது.அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் ஒசூருக்கு அடுத்த இடத்தில் திருப்பூர் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 400க்கும் அதிகமான விவசாயிகள், நுாறு டன் வரை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.இந்த சந்தைக்கு, 22ம் தேதி சுயஊரடங்கு உத்தரவுக்கு மறுநாள், 39 டன் காய்கறி வந்தது கிராக்கி காரணமாக, 93 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. 120 விவசாயிகள், 3,970 வாடிக் கையாளர்கள் வந்தனர். தொடர்ந்து உழவர் சந்தை செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நேற்று, 98 டன் காய்கறி, மூன்று டன் பழங்கள் வந்திருந்தது. 21 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.ஒரே நேரத்தில் காய்கறி வாங்க பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் வந்ததால் பல்லடம் ரோடு,ஏ.பி.டி., ரோட்டில் ஒரு மணி நேரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. கனரக வாகனங்கள், டூவீலர்கள் வெளியே வர முடியவில்லை இரண்டு நாட்களில் மட்டும், ஒரு கோடியே, 14 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனை நடந்துள்ளதாக, உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X