பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை குடிநீர் வினியோகம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

பல்லடம்:கேத்தனுார் ஊராட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு மூலிகை குடிநீர் வினியோகிக்கப்பட்டது.பல்லடத்தை அடுத்த கேத்தனுார் ஊராட்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கிராம மக்களுக்கு, மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. கேத்தனுார் ஊராட்சி தலைவர் சித்ரா தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலு வலர் முருகன் முன்னிலை வகித்தார்.ஆடாதோடை, அக்கரகாரம், கற்பூரவள்ளி, திப்பிலி, சீந்தில் கொடி உள்ளிட்ட, 15 வகையான மூலிகைகளை கொண்டு, சித்தா மருத்துவர் கல்யாண சுந்தரம் தயாரித்த கபசுர மூலிகை குடிநீர் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.முன்னதாக, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டன. தாசில்தார் சிவசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி தலைவர் ஹரிகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X