பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கொரோனா சிறப்பு வார்டு: மாவட்ட நிர்வாகம் தீவிர ஆலோசனை

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் நஞ்சப்பா அல்லது ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், கொரோனா சிறப்பு வார்டு அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தேசித்துள்ளது.மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரிகளில், கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச அளவு நோயாளிகள் மட்டுமே அங்கு தங்கி, சிகிச்சை பெற முடியும்.கொேரானா அறிகுறி என்று கண்டறியப்பட்டவர், தனிமைப்படுத்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவரிடம் ரத்த மாதிரி எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு முடிவு கிடைத்த பிறகே, கொரோனா தொற்று உண்மையா என்பதை உறுதி செய்ய முடியும்.கொரோனா வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. எனவே, தனிமைப்படுத்திய நிலையில் உள்ள, புதிய கட்டடங்களை கண்டறிந்து, கொரோனா சிறப்பு வார்டுகளை உருவாக்க, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, லண்டன் சென்று வந்த ஒரு ஆண் மட்டும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்; கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தின நிலவரப்படி, வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய, 97 பேர், சுகாதாரத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர்.அவர்களின் வீடுகளை அடையாளம் செய்து, தனிமைப்படுத்திய நிலையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், நிர்வாக வசதிக்காக, திருப்பூரிலேயே, ஒரு தனிமையான சூழலில் சிறப்பு வார்டுகளை கொண்ட கட்டடத்தை உருவாக்க, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி அல்லது ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி வளாகம், சிறப்பு வார்டுக்காக தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது,''நஞ்சப்பா பள்ளி அல்லது ஜெய்வாபாய் பள்ளியில், கொரோனா சிறப்பு வார்டு அமைக்க முடிவு செய்துள்ளோம்.ஆனால், உறுதியாகவில்லை. ஏதாவது, ஓரிடத்தில் கொரோனா சிறப்பு வார்டு உருவாக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X