பொது செய்தி

தமிழ்நாடு

பின்னலாடை உற்பத்தி முடக்கம்: தொழிலாளருக்கு வருவாய் இழப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், உள்நாடு, வெளிநாடுகளுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனங்கள்; நிட்டிங், டையிங், காம்பாக்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இந்த துறை சார்ந்து, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச்சேர்ந்த தொழிலாளர் ஆறு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுவருகின்றனர்.
கொரோனாவால், ஐரோப்பா, அமெரிக்க நாட்டு வர்த்தகர்கள், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கிய ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்துவருகின்றனர். எல்லை மூடப்பட்டுள்ளதால், சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது; உள்நாட்டுக்காக தயாரிக்கப்பட்ட தினமும் 10 கோடி மதிப்பிலான ஆடைகள் தேக்கமடைந்துவருகின்றன.வர்த்தகம் பாதித்தபோதும், வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திருப்பூர் பின்னலாடை துறை தொடர்ந்து இயங்கிவந்தது.தொழில் அமைப்பினருடன் நேற்று ஆலோசனை நடத்திய கலெக்டர் விஜயகார்த்திகேயன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை இயக்கத்தை நிறுத்தவேண்டுமென உத்தரவிட்டார்.144 தடை உத்தரவும் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆடை தயாரிப்பு, ஜாப்ஒர்க் நிறுவனங்கள், பணிபுரிந்த நாட்களுக்கான சம்பளத்தை வழங்கி, நேற்று மாலை முதல் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளன.ஆடை உற்பத்தி நிறுத்தப்பட்டு, நிறுவன நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டு, விடுமுறை அறிவிப்பு போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது.ஆடை தயாரிப்பு முடங்கியுள்ளதால், பின்னலாடை தொழிலாளர்கள் வேலை, வருவாய் இழப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, பின்னலாடை நிறுவனங்கள், ஒரு மாத சம்பளத்தை முன்னரே வழங்கவேண்டும். பாதிப்புகள் நீங்கும்வரை, தொழிலாளர்கள், வங்கி, நிதி நிறுவனங்களிடம் பெற்றுள்ள அனைத்துவகை கடன்களை திருப்பிச்செலுத்த அவகாசம் வழங்கவேண்டும் என, அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், ''கடந்த மூன்று மாதங்களாக, திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கவேண்டும். இ.எஸ்.ஐ., மூலம், விடுமுறை நாட்களுக்கான தொகையை வழங்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X