பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதல் பஸ் இயக்காததால் நேற்று பஸ் ஏற புது பஸ் ஸ்டாண்ட் வந்த பயணிகள் தவிப்புக்கு உள்ளாயினர்.இன்று மாலை, 6:00 மணி முதல் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நேற்று பஸ் ஏற புது பஸ் ஸ்டாண்டுக்கு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் திரண்டனர். திண்டுக்கல், நாகர்கோவில், திருநெல்வேலிக்கு பஸ்கள் இல்லை. வந்த ஓரிரு பஸ்களில் அடித்துபிடித்து ஏறி இருக்கை பிடித்தனர்.மதுரை, தேனி பஸ்களில் இடம் பிடிக்க பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் பலரும் காத்திருந்தனர். பஸ் உள்ளே நுழையும் போது அங்கேயே பஸ் ஏறிக் கொண்டனர். குழந்தைகளை அழைத்துக் கொண்டே வந்த பெண்கள் பஸ் ஏற முடியாமல் தள்ளுமுள்ளுவில் சிக்கி தவித்தனர்.பணியை விட்டு நேற்று வீடு திரும்பிய பலர், இரவு பஸ் ஸ்டாண்ட் புறப்பட்டு வந்ததால், நள்ளிரவை தாண்டியும் பஸ்களில் கூட்டம் தொடர்ந்தது. கூட்டத்துக்கு ஏற்ப பஸ் இயக்காததால், பயணிகள் பெருத்த சிரமத்துக்கு உள்ளாயினர்.நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. காலை, 5:00 மணிக்கு பின்னரே விலக்கப்பட்டது. அடுத்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், தென் மாவட்டத்தில் இருந்து திருப்பூருக்கு பஸ் இயக்கப்படவில்லை.கோவை கோட்டம், திருப்பூர் மண்டலத்தில் இருந்து மட்டும் பஸ் இயங்கியது. காலையில் குறைந்திருந்த கூட்டம் திடீரென மாலையில் அதிகரித்ததால், கூடுதல் பஸ்களை உடனடியாக வரவழைக்க இயலவில்லை. இதனால், பயணிகள் எண்ணிக்கை ஏற்ப பஸ் இயக்க முடியவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் மதுரை, தேனிக்கு திடீரென வேன்களை இயக்கினர். மதுரைக்கு, 500 ரூபாய், தேனிக்கு, 400 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X