பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் களையின்றி முடிந்த பிளஸ் 2 தேர்வு

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா பீதியால் மாணவர்களின் வழக்கமான எந்த ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம் இன்றி பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது.மார்ச் 2ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வுடன் நிறைவடைந்தது. வேதியியல் தேர்வினை, 9 ஆயிரத்து, 301 பேரும், கணக்கு பதிவியல், 12 ஆயிரத்து, 958 பேரும், புவியியல் தேர்வை, 286 பேரும் எழுதினர். ஆயிரத்து, 267 பேர் பங்கேற்கவில்லை. தனித்தேர்வர்களில், 152 பேர் பங்கேற்றனர். 57 பேர் ஆப்சென்ட் ஆகினர்.அரை மணி நேரம் தாமதமாகவே தேர்வுகள் துவங்கியது. மதியம், 1:45 மணி வரை தேர்வெழுதினர். தேர்வு முடிந்ததும் மாணவர்கள் கூட்டமாகவோ, குறைவான இடைவெளியில் பேசி கொள்ளவோ பள்ளி வளாகத்தில் வாய்ப்பளிக்கவில்லை. இதனால், கடைசி தேர்வை முடித்த சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல், உற்சாகம் இழந்தபடியே மாணவ, மாணவியர் வெளியேறினர்.அதேபோல், தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக, 80 சதவீத பெற்றோர்கள் காத்திருந்து, அவரவர் வாகனங்களிலே அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.தேர்வு குறித்து, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கூறியதாவது:ஸ்ரீமதி: தேர்வு பயத்தை விட, கொரோனா பீதி அதிகமாக இருந்தது. வேதியியல் தேர்வு மிக எளிதாக இருந்ததால், பரவாயில்லை. தேர்வறைக்கு வெளியேயும், படபடப்பு போகவில்லை.கோகிலா: இப்படியொரு பரபரப்புக்கு மத்தியில் தேர்வெழுதிய அனுபவம் புதிதாக இருந்தது. வேதியியல் தேர்வில் அனைத்து கேள்விகளும் தெரிந்தாகவே இருந்தன. நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன்.பிரியதர்ஷினி: எல்லோரும் சொந்த ஊருக்கு செல்வதால் பஸ்கள் கூட்டமாகவே இருந்தன. பள்ளிக்கு வந்து சேர்வதற்குள் ஒருவழியாகிவிட்டது. அரைமணி நேரம் தாமதமாக துவங்கியது பயனுள்ளதாக இருந்தது. கணக்குபதிவியல் தேர்வு எளிதாக மிக இருந்தது.சினேகா: கணக்கு பதிவியல் தேர்வு எதிர்பார்த்ததை விட சுலபமாகவே இருந்தது. முன்கூட்டியே முடித்துவிட்டேன். எல்லோரும் பாஸ் ஆகிவிடலாம். தேர்வு முடிந்ததும், நண்பர்களோடு பேச அனுமதிக்காததால் இங்க் அடித்து கொண்டாட முடியவில்லை.கலைவாணி: ஆசிரியர் சொன்ன அத்தனை கேள்விகளும் வந்திருந்தன. அடிக்கடி திருப்புதல் தேர்வு எழுதியதால் நேரத்திற்குள் முடிக்க முடிந்தது. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X