பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு அமல்: போலீசார் கண்காணிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் ஊரடங்கு உத்தரவையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நேற்று மாலை 6:00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், நேற்று மாலை முதல் நகரின் முக்கிய ரோடுகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.மாலை 6:00 மணிக்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதும், இரவு 8:00 மணி வரையும் பெரும்பாலானோர் டூ வீலரில், மற்றும் கார்களில் பல்வேறு பகுதிகளில் சென்ற வண்ணம் இருந்தனர்.அந்த வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் வாகனங்களில் சென்றவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.ஒரு சில இடங்களில் டீக்கடைகளில் கூட்டமாக காணப்பட்டோரை போலீசார் கலைந்து போக செய்தனர். பஸ்கள் இன்றி பலரும் நீண்ட துாரம் வரை நடைப்பயணமாக தங்கள் வீடு நோக்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X