பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தி நிறுத்தம்! பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் திடீர் சிக்கல்':கொரோனா' வைரஸ் தடுப்புக்காக நடவடிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement
 உற்பத்தி நிறுத்தம்! பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் திடீர் சிக்கல்':கொரோனா' வைரஸ் தடுப்புக்காக நடவடிக்கை

உடுமலை:'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பட்டுப்புழு வளர்ப்புக்கான, இளம் புழு வளர்ப்பு மையங்களில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், மல்பெரி சாகுபடி செய்து, பட்டுப்புழு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள், கர்நாடகா ராம்நகர், பட்டு வளர்ச்சித்துறையின், கோவை, தர்மபுரி, சேலம், ஒசூர், மைவாடி ஆகிய அரசு கொள்முதல் மையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.பட்டு நுால் உற்பத்திக்கு தேவையான பட்டுக்கூடுகளை, கொள்முதல் மையங்களில் இருந்து ரீலர்கள் வாங்கிச்செல்கின்றனர். சங்கிலித்தொடர் போன்ற, இத்தொழிலில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
விலை வீழ்ச்சியால் கவலை கோடை காலம் துவங்கியதும், பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ரீலர்கள் வருகை குறைவு போன்ற பிரச்னைகளால், வெண்பட்டுக்கூடுகள் விலை, கிலோ, 600 ரூபாயில் இருந்து, 350 ரூபாய் வரை சரிந்துள்ளது.புழு வளர்ப்பு மனையில், சீதோஷ்ண நிலையை பராமரித்து, மிக கவனமாக புழுக்களை பராமரிக்க வேண்டும்; கூடுகளை அறுவடை செய்யும் வரை, புழு வளர்ப்பு மனையில், பல்வேறு தொழில்நுட்பங்களை முறையாக பின்பற்றினால் மட்டுமே தரமான பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு, கோடை காலத்திலும், 'ரிஸ்க்' எடுத்து, பட்டுப்புழுக்களை பராமரித்த விவசாயிகளுக்கு, விலை வீழ்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், பட்டுப்புழுக்களுக்கான முட்டைகளை பொரித்து, 7 நாட்கள் வரை, பராமரித்து, விவசாயிகளுக்கு வழங்கும், இளம் புழு வளர்ப்பு மையங்கள் அதிகம் செயல்பட்டு வருகிறது. முட்டையிலிருந்து வெளியேறும், புழுக்களை முதல் ஏழு நாட்கள், பராமரிப்பது சிரம மாகும். எனவே, இளம் புழு வளர்ப்பு மனைகளில் இருந்து ஏழு நாட்கள் பராமரித்த, புழுக்களை வாங்கிச்சென்று, புழு வளர்ப்பு மனைகளில் விவசாயிகள் பராமரிக்கின்றனர்.தற்காலிக விடுப்புஇந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, இளம் புழு வளர்ப்பு மையங்களில், உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.விற்பனைக்கு போராட்டம் புழு வளர்ப்பு மனைகளில், 23 நாட்களை வரை பட்டுப்புழுக்கள் பராமரிக்கப்படுகிறது.
பின்னர், புழுக்கள் கூடு கட்டி விடும். கூடு கட்டிய பிறகு, அவற்றை ஒரு வாரத்துக்குள் விற்பனை செய்தால் மட்டுமே, 'ரீலர்'கள், கூடுகளில் இருந்து பட்டு நுாலை பிரித்தெடுக்க முடியும். இல்லாவிட்டால், புழுக்கள் கூட்டை துளையிட்டு, வெளியேறி விடும். இதனால், பட்டு நுால் உற்பத்தி செய்ய முடியாது.
புதிதாக பட்டுப்புழு வளர்ப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள விவசாயிகள், தற்போது, அறுவடை தருணத்திலுள்ள, பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்துக்குள், பட்டுக்கூடுகளை விற்பனை செய்யாவிட்டால், ஒட்டுமொத்தமாக அவை வீணாகி விடும். எனவே, பட்டுக்கூடுகளை விற்பனை செய்வதற்கான வழிகாட்டுதலை பட்டு வளர்ச்சித்துறை மூலம், அரசு, வழங்க வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X