பொது செய்தி

தமிழ்நாடு

பால் சேகரிப்பு நிலையங்களில் கூட்ட நெரிசல்: 'ஆவின்' நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

உடுமலை:பால் சேகரிப்பு நிலையங்களில், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உட்பட பணிகளை தீவிரப்படுத்த, 'ஆவின்' நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 185 ஆவின் பால் சேகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில், கிராம உற்பத்தியாளர்களிடம் இருந்து, பால், சேகரிக்கப்பட்டு, குளிரூட்டு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கிராமங்களில், காலை, மாலை நேரங்களில், அதிக கூட்டம் சேருமிடமாக பால் சேகரிப்பு நிலையங்கள் உள்ளன.பால் ஊற்ற வருபவர்கள், உள்ளூரில் பால் வாங்க வரும் மக்கள், என, கொள்முதல் திறனுக்கேற்ப, சேகரிப்பு நிலைய பகுதியில் கூட்டம் இருக்கும்.இந்நிலையில், 'கொரோனா' வைரஸ் தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில், கூட்டம் சேர்வதை தவிர்த்தல் முக்கியமானதாகும். மேலும், பலரும் வந்து செல்லும் இடத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதால், அனைவரும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.இத்தகைய விழிப்புணர்வு பணிகள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்பாட்டில் உள்ளது. கிராமங்களிலுள்ள, ஊராட்சி அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் கூட இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். ஆனால், 'ஆவின்' தரப்பில், எவ்வித விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.அதே போல், பால் சேகரிப்பாளர், செயலாளர் போன்ற பணியாளர்களுக்கும், எவ்வித முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை.பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கொரோனா தடுப்பு குறித்து அனைத்து தரப்பிலும், விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கிராமங்களிலும், கைகளை அடிக்கடி கழுவுதல் உட்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால், பால் உற்பத்தியாளர்களுக்கு எவ்வித வழிகாட்டுதலும் ஆவின் தரப்பில் வழங்கவில்லை. எனவே, அனைத்து சேகரிப்பு மையங்களிலும், காலை, மாலை நேரங்களில் கிருமி நாசினி தெளிக்கவும், போதிய இடைவெளியில் நின்று பால் ஊற்றுதல் மற்றும் வாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேகரிப்பு நிலையங்களில், கைகளை கழுவுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X