பொது செய்தி

தமிழ்நாடு

தினசரி சந்தையில் திரண்ட பிற மாவட்ட வியாபாரிகள்: டன் கணக்கில் காய்கறிகள் குவிந்து வர்த்தகம் 'ஜோர்!'

Added : மார் 25, 2020
Share
Advertisement
 தினசரி சந்தையில் திரண்ட பிற மாவட்ட வியாபாரிகள்: டன் கணக்கில் காய்கறிகள் குவிந்து வர்த்தகம் 'ஜோர்!'

உடுமலை:உடுமலை தினசரி சந்தைக்கு, காய்கறிகள் வரத்து பல மடங்கு அதிகரித்த நிலையில், கேரளா மற்றும் பல்வேறு மாவட்ட வியாபாரிகளும் அதிகளவு வந்ததால், விலை கடுமையாக உயர்ந்தது.'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை தினசரி சந்தைக்கு, வழக்கமாக, 700 டன் காய்கறிகள் வரத்து காணப்படும். மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், நேற்று மீண்டும் சந்தை வளாகத்தில் ஏலம் நடந்தது.உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, ஏராளமான விவசாயிகள் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். நேற்று, மூன்று மடங்கு வரை அதிகரித்து, 2,400 கிலோ காய்கறிகள் வரத்து காணப்பட்டது. தக்காளி மட்டுமே, 1,200 டன் வரை வரத்து இருந்தது.நேற்று மாலை, 6:00 மணிக்கு துவங்கி, ஏப்.,1 வரை, மாநிலம் முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ளதால், வழக்கத்தை விட வியாபாரிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.கேரளா மாநிலம், மறையூர், மூணாறு வியாபாரிகள், அப்பகுதியிலுள்ள தேயிலை எஸ்டேட்களிலிருந்தும், தஞ்சை, திருச்சி, கும்பகோணம், சங்கரன்கோவில் என பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வந்து, காய்கறிகள் கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றிச்சென்றனர். இதனால், நேற்று வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.காய்கறி விலைகள் கடும் உயர்வுஉடுமலை பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகளவு உள்ள நிலையில், கடந்த வாரம், 14 கிலோ கொண்ட பெட்டி, 60 முதல், 120 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்தது. ஆனால், நேற்று, 200 முதல் 220 ரூபாய் வரை விற்றது.மிளகாய், கிலோ, 8-10 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 60 ரூபாய்க்கு விற்றது. கத்தரி, 8-12க்கு விற்று வந்தது; நேற்று, 30 ரூபாய்க்கும், 12 ரூபாய் விற்று வந்த பாகற்காய், 22 ரூபாய்க்கும், 4-5 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோஸ், 12 ரூபாய்க்கும், 21 ரூபாய்க்கு விற்ற உருளைக்கிழங்கு, 30 ரூபாய்க்கும் விற்றது.கேரட் விலை கிலோவுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 55 ரூபாய்க்கும், பீன்ஸ், 30 ரூபாய் உயர்ந்து, 65 ரூபாய்க்கும் விற்றது.
சின்ன வெங்காயம், கிலோ, 35 முதல் 40 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், நேற்று, 70 முதல் 75 ரூபாய்க்கும், பல்லாரி, 10 ரூபாய் விலை உயர்ந்து, 30 ரூபாய்க்கும் விற்றது. தேங்காய் ஒரு டன், 36 ஆயிரம் ரூபாயிலிருந்து, 38 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.வியாபாரிகள் கூறுகையில்,'உடுமலை சந்தைக்கு காய்கறிகளில் வரத்து மூன்று மடங்கு அதிகரித்தது.
கேரளா மாநிலத்திலிருந்தும், தக்காளி மற்ற பகுதிகளில் விலை உயர்ந்ததாலும், பல்வேறு மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்ய வந்திருந்தனர். இதனால், காய்கறிகள் ஏலத்தில் போட்டி அதிகரித்து, விலை உயர்ந்தது. 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தாலும், காய்கறிகளுக்கு பிரச்னை இல்லை. தற்போது, இருப்பு அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் விலை குறையும் வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X