பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கை; அமலுக்கு வந்தது தடை உத்தரவு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 கொரோனா முன்னெச்சரிக்கை; அமலுக்கு வந்தது தடை உத்தரவு

உடுமலை:உடுமலையில், 144 தடை உத்தரவு நேற்று மாலை அமலுக்கு வந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர், நேற்று மதியம் முதலே பணிகளை துவக்கினர்.ஆட்டோ மூலம் அனைத்து கடைகளையும் மூட வேண்டும். பொதுமக்கள் யாரும், வீட்டிலிருந்து வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மாலை 5:00 மணிக்கு, அதிகாரிகள் குழு, ஒவ்வொரு கடைகளாக சென்று கடைகளை முழுமையாக மூடி, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடை மட்டும் திறந்திருக்கலாம், என அறிவுறுத்தினர். இதனால், நேற்று மாலை, 5:00 மணி முதலே, கடைகளளை, வியாபாரிகள் மூடத்துவங்கினர். 6:00 மணிக்கு, முற்றிலும் கடைகள் அடைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதால், நகரின் பிரதான ரோடுகளில், வாகனங்கள், மக்கள் போக்கு வரத்து இல்லாமல், அமைதியாக காணப்பட்டது. கிராமங்களிலும், உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பிலும், ஆட்டோ, தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, 144 தடை உத்தரவு குறித்தும் அறிவிக்கப்பட்டது.ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்கோட்டாட்சியர் ரவிக் குமார் கூறியதாவது: அரசின் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருக்கலாம், பொதுமக்கள் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தாலும், கடைகளில் கூட்டம் இருக்க கூடாது. பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது; அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.நகரம் மற்றும் கிராமங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோடுகளில் வாகனங்கள் செல்லக் கூடாது; உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்றாலும், உரிய ஆய்வுக்கு பிறகே, அனுமதிக்கப்படும்.'கொரோனா' தொற்று குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். சமுதாயத்தில் இணையால், வீடுகளில் ஓய்வு எடுங்கள்; அடிக்கடி, சோப் ஆயில் கொண்டு கைகளை, 20 நிமிடங்கள் வரை கழுவ வேண்டும். கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும், சங்கிலி தொடரை அறுக்க, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, கோட்டாட்சியர் ரவிக்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X