பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றணும்: சுகாதாரத்துறையினர் வலியுறுத்தல்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றணும்: சுகாதாரத்துறையினர் வலியுறுத்தல்

உடுமலை:கொரோனா தடுப்பு பணிகளில், சுய கட்டுப்பாட்டுடன், 'தனித்திருத்தல்' உட்பட அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 15 வீடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணி முதல், தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கில், சுயகட்டுப்பாட்டுடன், 'தனித்திரு' உட்பட அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற சுகாதாரத்துறையினர் வலியுறுத்தினர்.தனித்திருங்கள்!தொடர் விழிப்புணர்வு பணிகளால், மக்கள் கூடும் இடங்களில், முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.
இதற்கு உதாரணமாக, கிராமங்களில் இருந்து, நேற்று உடுமலை சந்தைக்கு வந்த பெண்கள், சேலைகளால், முககவசம் அணிந்தனர். ஆனால், இடைவெளியை பின்பற்றவில்லை.இதே போல், வாகன ஓட்டிகளில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து நேற்று பயணித்தனர். எனவே, கிராமங்களிலும், இன்று முதல், 5க்கும் மேற்பட்டவர்கள், கூடுவதை தவிர்க்க வேண்டும்.வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் உட்பட வழிமுறைகளை சுயகட்டுப்பாட்டுடன், முறையாக பின்பற்றுங்கள் என சுகாதாரத்துறையினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X