பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட எல்லைகள் மூடல்; மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

உடுமலை:தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் முழுவதும், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடைக்காலத்தில் முழுமையாக திருப்பூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டிருக்கும். தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில், 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.சிறிய மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள், டீக்கடைகள், 'அம்மா' உணவங்கள், மருந்தகங்கள், 'ஆவின்' பால் விற்பனை நிலையங்கள், அரசு நியாய விலை கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தவிர மற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் இயங்காது.சில அத்தியாவசிய துறைகள் தவிர இதர அனைத்து அரசு அலுவலகங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் இயங்காது. அத்தியாவசிய பண்டங்கள், உணவுப்பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துபொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர இதர அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஒப்பந்த வாகனங்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.வங்கிகள், 'ஏடிஎம்' மையங்கள், பெட்ரோல் பங்க், சிலிண்டர் வினியோக மையங்கள், விவசாய விலை பொருட்கள் விற்பனை மையங்கள், கால்நடை தீவன விற்பனை கடைகள், வழக்கம் போல் இயங்கும். உணவகங்களில் உணவருந்த அனுமதியில்லை, பார்சல் வாங்கி செல்லலாம்.டீக்கடைகளில் அதிக கூட்டம் கூடுவதற்கு அனுமதியில்லை. மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடையில்லை. மின்வினியோகம், குடிநீர், தபால் மற்றும் தொலைபேசி சேவைகள், குடிநீர் கேன் வினியோகம் வழக்கம் போல் செயல்படும்.மார்ச் 16ம் தேதிக்கு முன்னர், நிச்சயிக்கப்பட்ட இனங்கள் மட்டும் அதிகப்பட்சம், 30 பங்கேற்பாளர்களுடன் நடத்திட திருமண மண்டபங்களுக்கு தடையில்லை. அதற்கும் மேல் மக்கள் பங்கேற்கக்கூடாது.இவ்வாறு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X