உலகிற்கு சவால் கொடுக்கும் கொரோனா

Added : மார் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 உலகிற்கு சவால் கொடுக்கும் கொரோனா

உலக வரலாற்றில் பல நுாற்றாண்டுகளில் அவ்வப்போது பான்டெமிக் எனப்படும் தொற்று நோய்கள் உலகத்தையே அச்சுறுத்துகிறது. இவ்வாறு நிகழும் நோய்கள் நம் மக்கள் தொகையை துரிதமாக அழிக்கும் தீய வல்லமை வாய்ந்தது என்பது வருத்தமான செய்தி. கடந்த மூன்று மாதங்களாக கோவிட்19' என்கிற கொரோனா வைரஸ் உலகத்தில் பரவி மக்களுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கிக் கொண்டிருப்பதை அறிவீர்கள். விஞ்ஞான ரீதியாக மருத்துவப் பிரிவு அபரிமிதமான முன்னேற்றம் அடைந்தும் பான்டெமிக் நோய்கள் இவ்வளவு அச்சம் கொடுப்பது ஏன்..பான்டெமிக் என்றால் என்னசாதாரணமாக ஒரு நோய் தொற்று சிறிய வட்டத்தில் திடீரென பரவினால் அதை எபிடெமிக் என்று கூறுவோம். அதுவே உலகளவில் பல நாடுகளில் கண்டங்கள் தாண்டி பரவும்பொழுது அது பான்டெமிக் என்று அழைக்கப்படுகிறது. நம் வரலாற்றை ஆராய்ந்தால் பல ஆண்டுகள் இடைவெளியில் திடீரென்று ஒரு பான்டெமிக்கை எதிர்கொள்கிறோம். உதாரணமாக 2009ல் பன்றிக்காய்ச்சல் பரவி பல உயிரிழப்பு நேர்ந்தது. காலரா நோய் பலமுறை தாக்கியுள்ளது. ஆக இது புதிதல்ல. ஆனால் அதை எதிர்கொள்ளும் விதமும் நடவடிக்கைகளும் என்ன என்பதை கால இடைவெளியினால் மறந்துவிடுகிறோம்.கொரோனா இதர பரவல் நோயைவிட வேறுபடுவது எப்படி..கொரோனா வைரஸ் கிருமி முன்பு வந்த இதர ப்ளூ நோய் கிருமிகள் போல் விலங்குகளில் இருந்து வந்திருந்தாலும், இப்பொழுது வந்த கோவிட்19' பிரிவு மனிதர்களைத் தொற்றியிருப்பது இதுவே முதல்முறை. சாதாரணமாக மனித உடலில் தொற்றிக்கொள்ள ஆர்.என்.ஏ., அணுக்களில் சில மாறுபாடுகள் ஏற்பட்டு பின்புதான் தொற்றிக் கொள்ளும்.ஆரம்ப கட்டத்தில்பத்து வருடங்களுக்கு முன்பை விட இப்பொழுது அறிவியல் முன்னேற்றம் சிறப்பாக இருந்தும், நம்மால் இந்த நோயை ஆரம்பகட்டத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை.கோவிட் 19 என்னும் கிருமியின் முக்கிய அம்சம் அதனுடைய தொற்றுத்தன்மை தான். இந்த வைரஸ் கிருமி ஒருவரை தாக்கிய பிறகும், அதன் அறிகுறிகள் தெரிவதற்கு 5 முதல் 14 நாட்கள் ஆகலாம். ஆனால் இந்த நேரத்திலே அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவத் தொடங்கிவிடும்.நோய் தொற்று அளவை R0 என்னும் அளவுகோல் மூலம் வரையறுக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சலின் தொற்று அளவு 1 (ஒன்று) ஆகும். அப்படி என்றால் சராசரியாக ஒரு நபர் இன்னொரு நபருக்கு பரப்புவார் என்று பொருள்.கோவிட் 19 கிருமியின் தொற்று அளவு 2 முதல் 4 வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது ஒருவர் சராசரியாக 2 முதல் 4 பேருக்கு பரப்புகிறார். கணித அடிப்படையில் பார்த்தால், மூன்று அல்லது நான்கால் பெருக்கப்பட்டால் மிக விசாலமாக பரவும் என்பது தெரிகிறது.தற்காப்பு முறைகள்இது உணர்த்துவது என்னவென்றால், நோய் சிறிய அளவில் இருக்கும்போது தற்காப்பு முறைகள் சரியாக மேற்கொண்டால் இதை குறைத்துவிடலாம். இதற்கு சரியான உதாரணங்கள் தைவான் மற்றும் தென்கொரியா. தைவான் மற்றும் இத்தாலி நாடுகளில் சிறிய இடைவெளியில் தான் முதல் நோயுள்ள நபர் கண்டறியப்பட்டார். தைவான் தடுப்பு முறைகளை சிறப்பாக கையாண்டதால், நோயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. தென்கொரியாவில் நோய் சற்று பரவிய நிலையில் இருந்தபோது, சீரான பரிசோதனை முறைகள் மற்றும் பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்தி இந்த நோயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இத்தாலி நிலை நமக்கு தெரியும்.என்ன செய்யலாம்பான்டெமிக் நோய்களை உலக சுகாதார நிறுவனம் பல கட்டமாக பிரித்துள்ளது. இந்த கட்டங்கள் ஒரு கிருமி, விலங்குகளில் ஆரம்பித்து, முதல் மனிதனுக்கு தொற்றாகி, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சிறியளவில் பரவி, சமூக அளவில் வேகமாக பரவி நோயின் வீரியத்தை வெளிப்படுத்துகிறது. இதில் நாம் எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய கட்டம், சிறியளவில் பரவும்போது கட்டுப்படுத்துவதே ஆகும்.அதை தொடர்பு நிலை(கன்டெய்ன்மென்ட் ஸ்டேஜ்' என்று கூறலாம். தற்போது இந்தியா இந்த கட்டத்தில்தான் உள்ளது. ஆக இச்சமயத்தில் நாம் சரியான முறைகளைக் கையாண்டால் நமக்கு வெற்றி நிச்சயம்.முதலாவதாக நாம் செய்ய வேண்டியது ஒருவருக்கு மற்றொருவர் குறைந்தது 3 அடி இடைவெளி வைத்துக்கொள்வது. ஏனென்றால் இந்த நோய் நீர்த்துளிகளால் பரவுகிறது. எனவே பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.இரண்டாவது தும்மல் மற்றும் இருமல் மூலமாக எளிதாக பரவும். இந்த நோயைத் தடுக்க ஒரு கைத்துணியை வைத்து வாயை தும்மும்போது அல்லது இருமும்போது மூடிக்கொள்ள வேண்டும்.மூன்றாவதாக கையை சுத்தமாக சோப் வைத்து 20 வினாடிகள் கழுவுவது அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் வைத்து சுத்தப்படுத்துவது.நான்காவதாக நோய் கண்டறியப்பட்டவருக்கு தனிமை வார்டில் சிறப்பு சிகிச்சை அளிப்பது மற்றும் நோய் சந்தேகம் உள்ளவர்கள் மற்றும் நோய் தொற்று வாய்ப்புள்ள வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதே ஆகும்.சிகிச்சை எப்படிஇதுவரை எந்தவிதமான மருந்தும் விஞ்ஞான ரீதியாக உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் ஹைட்ராக்சிக்ளோரோக்குவின்' என்னும் மருந்தை அளிக்கலாம் என்று ஆரம்பகட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. பெரிய அளவிலான முழு ஆராய்ச்சியில் உறுதிபடுத்தப்பட்டால், இது சிகிச்சை மருந்தாக அமையலாம். தடுப்பூசியும் ஆராய்ச்சி நிலையில் உள்ளது.எவ்வாறு தடுக்கலாம்பான்டெமிக் கிருமிகள் ஆரம்பமாகும் இடங்கள் சுகாதாரமற்ற இடங்கள் ஆகும். வைரஸ் கிருமியால் வரும் பான்டெமிக் நோய்கள் விலங்குகளில் இருந்தே வருகிறது.புது நோய் கண்டறியப்பட்டால் மிக உஷாராகி முதல்நபரை தொற்றும் நிலையிலே தனிமைப்படுத்த வேண்டும். அதை பரவ விடாமல் தடுக்கும் முறைகளை செய்ய வேண்டும்.கொரோனாவை நன்கறிந்து, முன்னெச்சரிக்கையுடன் அதை துரத்தும் வழிகளை பின்பற்றி, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.- கே.எஸ். ஜேஷ் நாராயன்எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு மாணவர்,வேலம்மாள் மருத்துவ கல்லுாரி,மதுரை. 93442 46436

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-மார்-202008:31:21 IST Report Abuse
 nicolethomson தவறு மாணவரே ஹைடிராக்சி குளோரோகுயின் இன்னமும் பரிந்துரைக்கப்படவே இல்லை எல்லாம் தெரிந்த வாட்சாப் முகநூல் யூனிவர்சிட்டி மாணவர்கள் தான் இதனை சொல்லிக்கொண்டுள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X