பொது செய்தி

தமிழ்நாடு

நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு குழு : தாலுகா வாரியாக நியமித்து உத்தரவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

உடுமலை;'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, தாலுகா வாரியாக சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிக்கை:'கொரோனா' வைரஸ் நோய் பரவலை தடுக்க, மாவட்டத்தில் துணை ஆட்சியர் நிலையில் ஒவ்வொரு தாலுகாவுக்கும், சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் ஒவ்வொரு தாலுகாவிலும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நோய் தொற்று பரவாமல், இருப்பதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க வருவாய்த்துறை, போலீஸ், சுகாதாரத்துறை அலுவலர்களைக் கொண்டு தனிமைப்படுத்தலை கண்காணிக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது.மருத்துவமனை வளாகத்தினுள் சுகாதாரத்துறை அலுவலர்களைக் கொண்டு துாய்மைப்படுத்துதல் மற்றும் தொற்று நீக்குதல் குழு, பொது இடங்களில் சமூக விலகல் மற்றும் பின்பற்றுதலை கண்காணிக்க பல்துறை அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் உள்ளிட்ட கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.எனவே, 'கொரோனா' வைரஸ் நோய் தாக்குதலிலிருந்து மக்களை காக்க, மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X