பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ப்பு யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நிறைவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கூடலுார்:முதுமலையில், வளர்ப்பு யானைகளுக்கு, 48 நாட்கள் நடந்த, சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் நேற்று, எளிமையான நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, ஆனைமலை டாப்சிலிப், கோவை சாடிவயல், சென்னை அறிஞர் அண்ணா பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான, 62 வளர்ப்பு யானைகளுக்கான, சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம், பிப்., 6ல் துவங்கியது.முதுமலையில் நடந்த விழாவில், மாநில வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.இதன் காரணமாக, வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டு, வழக்கமாக வழங்கும் உணவுடன் ஊட்டச்சத்து மாத்திரைகள், சவன்பிராஷ் லேகியம், அஷ்ட சூரணம், புரோட்டின்பவுடர், பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டன.இந்நிலையில், இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், விழாவுக்கு வனச்சரகர், தயானந்தன் தலைமை வகித்து, வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில், வனவர் சந்தனராஜ் வன ஊழியர்கள் யானை பாகன்கள் பங்கேற்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாம் நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, நிறைவு நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X