பொது செய்தி

தமிழ்நாடு

பூ எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி

Added : மார் 25, 2020
Share
Advertisement
 பூ எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி

ஊத்துக்கோட்டை:விடியற்காலை அறுவடை செய்த மல்லிகை பூவை, கோயம்பேடிற்கு எடுத்து செல்ல, பஸ் வசதி இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிப்பவர்களின் முக்கிய தொழில் விவசாயம். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் வயல்வெளிகளில், மல்லிகை, சாமந்தி உள்ளிட்ட பூக்களை பயிரிடப்படுகின்றனர்.ஊத்துக்கோட்டை, தொம்பரம்பேடு, தாராட்சி, ஆத்துப்பாக்கம், பெரியபாளையம், போந்தவாக்கம், ஆகிய கிராமங்களில், பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.மேற்கண்ட பகுதிகளில், விடியற்காலை வயல்வெளிக்குச் சென்று, பூக்களை அறுவடை செய்து, மூட்டையாக கட்டி, கோயம்பேடிற்கு அனுப்பி வைப்பர்.
கொரோனா வைரஸ் பரவலால், கோயம்பேடிற்கு போதுமான அளவு, பஸ்கள் இயக்கப்படாததால், விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்து குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.அறுவடை செய்த பூக்களை எடுத்துக் கொண்டு, போந்தவாக்கம் கிராமத்தில் இருந்து விவசாயிகள், ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் வந்தனர். அங்கு போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படாததால், பூக்கள் மேல் தண்ணீர் ஊற்றியபடி காத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X