பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பு

கும்மிடிப்பூண்டி:ஆந்திர -- தமிழக எல்லையில் உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி வழியாக கடந்து செல்லும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்து, கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வினியோகித்து வருகின்றனர்.வாகன ஓட்டுனர்கள் மற்றும் உடன் பயணிப்பவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதித்து வருகின்றனர்.எளாவூர், ஆரம்பாக்கம், கண்ணம்பாக்கம், பொம்மாஜிகுளம் உள்ளிட்ட தமிழக - ஆந்திர பகுதியை இணைக்கும் சாலைகள் மூடப்பட்டுவிட்டன.அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக -- ஆந்திர எல்லைகளில், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ரமேஷ் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X