பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழு மூலம் கிருமி நாசினி தயாரிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 மகளிர் குழு மூலம் கிருமி நாசினி தயாரிப்பு

திருவள்ளூர்:மாவட்ட சுகாதார துறை சார்பில், மகளிர் குழு மூலம், கிருமி நாசினி திரவம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தடுக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில், முதலில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறையினர், மகளிர் குழு மூலம், கிருமிநாசினி திரவம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இப்பணியை, கலெக்டர், மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு விபரம் கேட்டறிந்தார்.இங்கு தயாரிக்கப்படும் கிருமி நாசினி, அனைத்து அரசு அலுவலகங்கள், சுகாதார துறையினருக்கு வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X