சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசை தாக்கி தப்ப முயன்றவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 போலீசை தாக்கி தப்ப முயன்றவர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

திருவள்ளூர்:பிரியாணி கடை ஊழியரை தாக்கி, தலைமறைவாக இருந்த கும்பலை பிடிக்கச் சென்ற காவலரை தாக்கி தப்ப முயன்றவரை, போலீசார், துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில், கற்குழாய் தெருவில், பிரியாணி கடை உள்ளது. இக்கடையில், மேல்நல்லாத்துாரைச் சேர்ந்த, பழனி மகன் பாபு, 25, பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு, பெரியகுப்பத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ், 24, மற்றும் அவரது நண்பர்கள் எட்டு பேர், அந்த கடையில், பிரியாணி சாப்பிட்டனர்.பிரியாணிக்கு காசு கொடுக்காமல் சென்ற அவர்களிடம், பாபு, காசு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை உருட்டு கட்டையால் தாக்கி, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த, மற்றொரு ஊழியர் தயாளன் என்பவரின், இருசக்கர வாகனத்தை எரித்து, தப்பியது.காயமடைந்த பாபு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், தலைமறைவு கும்பல், மப்பேடு அடுத்த, மேட்டுகண்டிகையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார், அங்கு சென்றனர்.அப்போது, ஆகாஷ், தன்னை பிடிக்க வந்த, காவல் ஆய்வாளரின் ஓட்டுனர் கலைவாணனை, உருட்டு கட்டையால், தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார்.
உடனே, தற்காப்பு நடவடிக்கையாக, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், காலில் காயம் அடைந்து விழுந்த ஆகாசை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவருடன் இருந்த, ஐந்து பேரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.பின், காயமடைந்த ஆகாசை, போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இச்சம்பவம் குறித்து, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, பிடிபட்ட ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக, காஞ்சி டி.ஐ.ஜி., தேன்மொழி, திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன், ஆகியோர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X