பஸ்கள் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

குன்னுார்:குன்னுார் பகுதிகளில் பொருட்களை வாங்க மக்களின் கூட்டம் அலை மோதிய நிலையில், கிராம பஸ்கள் குறைக்கப்பட்டதால் நெரிசலில் பயணம் செய்தனர்.'மாநிலங்கள் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், கிராமங்களில் பஸ்கள் நிறுத்தப்படும்,' என, தெரிவிக்கப்பட்டதால், கொலக்கம்பை, துாதுார்மட்டம், ஆடர்லி, முள்ளிகூர், மஞ்சகம்பை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு பஸ் கிடைக்கவில்லை. பஸ்கள் வராததால், பலரும் வாடகை ஜீப்களில், 500, 1,000 ரூபாய் செலுத்தி கூட்டமாக சென்றனர்.மேலும், முள்ளிகூர் உள்ளிட்ட பஸ்களில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.கொலக்கம்பை, துாதுார்மட்டம் பஸ்களுக்கு பல மணி நேரம் காத்திருந்த மக்கள், நீண்ட தாமதத்துக்கு பின்பு, பஸ்களை பிடித்து சென்றனர்.இதேபோல, கோத்தகிரி பகுதியிலும், முன்னதாகவே பஸ்களை நிறுத்தியதால், பல கிராமங்களுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.குன்னுார் போக்குவரத்து கழக மேலாளர் வேலுச்சாமி கூறுகையில்,'' இங்குள்ள, 57 பஸ்களில், 30 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பயணிகள் வந்ததால் சில பஸ்கள் மாற்றப்பட்டன. 6:00 மணிக்கு முன்னதாகவே பணிமனைக்கு பஸ்கள் வர உத்தரவிடப்பட்டுள்ளது,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X