சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரிக்குள் வந்த வடமாநிலத்தவர் தேடும் பணியில் வருவாய் துறையினர்

Added : மார் 25, 2020
Share
Advertisement

குன்னுார்:குன்னுாருக்கு வந்த, 25 வட மாநிலத்தவர்களை தேடும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.நீலகிரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு உள்ள நிலையில், நேற்று காலை பர்லியார் வழியாக, லாரியில் ஜார்க்கண்ட் மாநிலத்தவர், 25 பேர் கட்டட பணிக்காக குன்னுாருக்கு வந்துள்ளனர்.144 தடை உத்தரவு காரணமாக, இங்கு பணிபுரியும் பலர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில், நீலகிரிக்குள் புகுந்த வட மாநிலத்தவர்களை கண்காணித்து பிடிக்க, மாவட்ட நிர்வாக உத்தரவிட்டது. தொடர்ந்து, தாசில்தார் குப்புராஜ், ஆர்.ஐ., கோபி, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் உட்பட அதிகாரிகள் நேற்று, சின்ன வண்டி சோலை, பேரட்டி எஸ்டேட் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறுகையில்,'தங்களது நிறுவனங்கள், எஸ்டேட்கள், வட மாநிலத்தவர் தங்கிய இடங்களில் புதிய நபர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக வருவாய் துறை, காவல் துறை, சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா பரிசோதனை செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X