பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் பாதுகாப்பு பணியில் 943 போலீசார்: 5 பேருக்கு மேல் நடமாடினால் வழக்கு பதிவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

ஊட்டி;நீலகிரியில், 144 தடை உத்தரவை அடுத்து, 943 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நீலகிரியில், அனைத்து சோதனை சாவடிகளும் நேற்று மூடப்பட்டது. பஸ், மினி பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. மாவட்டத்தில், 16 சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில், ஒரு எஸ்.ஜ., தலைமையில் போலீசார், சுகாதாரத்துறை, கால்நடை, வருவாய் துறை ஊழியர்கள் பணியில் உள்ளனர்.நகர் பகுதிகளில் இரண்டு 'ஷிப்ட்' அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் போலீசார் ரோந்து பணியில் இருப்பர். 'எஸ்.பி., தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி , இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் போலீசார்,' என, 943 பேர் 'ஷிப்ட்' அடிப்படையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.எஸ்.பி., சசி மோகன் கூறுகையில்,''மாவட்டத்தில், 16 சோதனை சாவடிகள், மார்க்கெட், முக்கிய பஜார், கிராம புறங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளை தவிர, பொது இடங்களில் முகாந்திரம் இல்லாமல், 5 பேருக்கு மேல் நடமாடினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு அளித்து, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X