சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு முத்திரை: முரண்டு பிடித்தவர்களிடம் போலீசார் சமரசம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு முத்திரை: முரண்டு பிடித்தவர்களிடம் போலீசார் சமரசம்

வெளிநாட்டில் இருந்து திரும்பி, வீடுகளில் தங்கி உள்ளவர்களை பாதுகாக்கவும், அவர்களால் தொற்று பரவாமல் தடுக்கவும், வீடுகளில், 'நோட்டீஸ்' ஒட்டி, அவர்கள் கையில் முத்திரை குத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்து வராமல், முரண்டு பிடித்தவர்களிடம், போலீசார் சமரசம் பேசினர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவை, வெகுவாக பாதித்துள்ளது. வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும், 3,000 வீடுகளை, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளாக, மாநகராட்சி அறிவித்து உள்ளது. அவர்கள், தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வெளி நபர்கள், இந்த வீடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில், 'கொரோனா தொற்று; உள்ளே வராதே' என்ற எச்சரிக்கை வாசகம் அடங்கிய நோட்டீஸ், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஒட்டப்பட்டது.மேலும், வெளிநாட்டில்இருந்து வந்த நபர்களின் கைகளில், தேர்தல்நேரத்தில் பயன்படுத்தும்மையால், முத்திரை குத்தப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட நபர், வெளிநாட்டில் இருந்து வந்த தேதி, எத்தனை நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற குறிப்பும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலர், நோட்டீஸ் ஒட்டவும், முத்திரை குத்தவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்களிடம், கொரோனா வைரஸ் பாதிப்பின் வீரியத்தை உணர்த்தி, அதிகாரிகள்நடவடிக்கை மேற்கொண்டனர். தீவிர எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து பிரச்னை செய்தவர்களிடம், போலீசார் சமரசம் செய்து, அவர்களை ஒத்துழைக்க வைத்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X