பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடி செய்ய ஆர்வம்

Added : மார் 25, 2020
Share
Advertisement
 மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடி செய்ய ஆர்வம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மடத்துக்குளம் பழைய ஆயக்கட்டு பகுதியில், நெல் மற்றும் கரும்பு புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காச்சோளம், காய்கறி மற்றும் பயிறு வகை பயிர்களும் சாகுபடி ஆகிறது. இந்தப்பயிர்களுக்கு பாசன நீர் கூடுதலாக தேவைப்படுகிறது. இதனால், பாசன நீர் குறைவாக உள்ள புதிய ஆயக்கட்டு பகுதியில், மாற்றுப்பயிராக பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.ஒரு ஏக்கர் பரப்பில், 600 பப்பாளி கன்றுகள் வரை சாகுபடி செய்ய முடியும். ஒரு ஏக்கர் நிலத்தை பராமரித்து உழவு செய்து, கன்றுகள் நடவு செய்வது தொடங்கி, வளர்ந்து மரமாகி காய்க்க தொடங்கும் வரை, ஒரு ஏக்கருக்கு, 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. பத்து மாதத்தில் இருந்து பப்பாளிப் பழங்கள் பறிக்கத்தொடங்கலாம்; 20 முதல் 25 மாதம் வரை மகசூல் கொடுக்கும்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறைந்த அளவு பாசன நீர் பப்பாளி சாகுபடிக்கு போதுமானதாகும். இதற்கு ஆண்டு முழுவதும் தேவையுள்ளது. விலையும் சீராக கிடைக்கிறது. இங்கு பறிக்கப்படும் பழங்கள், அருகிலுள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பப்பாளி சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுப்பதாக உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X