பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையில், வெளிமாநில தொழிலாளர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, அசாம், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
தனியார் எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், வால்பாறையில் சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சின்கோனா (டான்டீ) தேயிலை தோட்டத்தில், அசாம் சென்று வந்த தொழிலாளர்களை, எஸ்டேட் பகுதி மக்கள் பிடித்து, சொந்த ஊருகே திரும்பி அனுப்பினர். வால்பாறை அடுத்துள்ள ேஷக்கல்முடி எஸ்டேட் பகுதியில் வெளிமாநிலத்திலிருந்து, 20 தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர்.தகவல் அறிந்த சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரடியாக சென்று அவர்களை தனிமைப்படுத்தினர். வீட்டை வீட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X