பொது செய்தி

தமிழ்நாடு

விடுமுறை நாட்களில் வீட்டிலேயே இருக்கணும்! பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு 'அட்வைஸ்!'

Added : மார் 25, 2020
Share
Advertisement
 விடுமுறை நாட்களில் வீட்டிலேயே இருக்கணும்!  பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு 'அட்வைஸ்!'

உடுமலை:விடுமுறை நாட்களில் வெளியில் சுற்றாமல், வீட்டில் இருக்குமாறு, பிளஸ் 2 பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 'அட்வைஸ்' செய்து வழியனுப்பினர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ம்தேதி துவங்கியது. உடுமலை கல்வி மாவட்டத்தில், 17 மையங்களில், பொதுத் தேர்வு நடந்தது.
முதல் தேர்வான தமிழ் பாடத்தேர்வு எளிமையாகவும், இரண்டாவது ஆங்கிலத்தேர்வு கடினமாகவும் வந்ததால், மாணவர்களால் எந்த தேர்வு எப்படி வரும் என்பதே தெரியாமல் குழப்பமான மனநிலையில் ஒவ்வொரு தேர்வையும் நிறைவு செய்தனர்.இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இருப்பினும், தேர்வுநாள் வரும் வரை மாணவர்கள் குழப்பமான மனநிலையில் இருந்தனர். நேற்று பொதுத்தேர்வு நிறைவடைந்தது. அறிவியல் பிரிவில் வேதியியலும், கலைப்பிரிவில் கணக்கு பதிவியல் தேர்வும் நடந்தது. பள்ளிகளில் மாணவர்களுக்கு கிருமி நாசினி, சோப்புகள் வழங்கி கைகளை சுத்தம் செய்ய வைத்தனர்.சில பள்ளிகளில், மஞ்சள், வேம்பு மற்றும் உப்பு கலந்த இயற்கையான கிருமி நாசினிகளை நீரில் கலந்து அதில் கைகளை சுத்தம் செய்தனர்.
வேதியியல் தேர்வில், இரண்டு மதிப்பு வினாக்கள் கடினமாக இருந்ததாகவும், கணக்கு பதிவியல் தேர்வு, சதம் எடுப்பது சுலபம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். வழக்கமான தேர்வு இறுதி நாளில் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு மையங்களை விட்டு வெளியில் வருவதுண்டு.ஆனால், நேற்று, மாணவர்கள் கூடி நின்று பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை. விடு முறையில், வெளியில் சுற்றாமல், 'கொரோனா' தடுப்பு விழிப்புணர்வுக்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X