பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய்த்துறை இணையதளம் முடக்கம்: கணினி சிட்டா கிடைக்காமல் அதிருப்தி

Added : மார் 25, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு;வருவாய்துறை இணையதளம் இயங்காததால், கம்ப்யூட்டர் சிட்டா எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.வருவாய்துறை இணையதளம் மூலம் கம்ப்யூட்டர் சிட்டா, புலப்படம், 'அ' பதிவேடு போன்ற வைகள் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.இச்சேவைகள் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தகூடியவையாக உள்ளது. இந்த ஆவணங்கள் இல்லாமல், வங்கியில் கடன் பெறவோ, வேளாண் துறையில் விவசாயிகள் மானியம் பெறவோ, பத்திரப்பதிவு செய்யவோ முடியாது என்ற நிலை உள்ளது.விவசாய நிலம் மற்றும் வீட்டு மனை தொடர்பாக பத்திரப்பதிவு செய்யும்போது, சர்வே எண்களில் உட்பிரிவு, பட்டா மாறுதல் 'ஆன்லைன்' மூலமாக மாற்றப்படுகிறது.சொத்து தொடர்பாக மறு பதிவுக்கு வரும்போது, சர்வே எண்ணின் உட்பிரிவு தொடர்பாக வருவாய்த்துறை இணையதளத்தில் இருந்து, கட்டாயம் கம்ப்யூட்டர் சிட்டா பதிவிறக்கம் செய்து கொண்டால் மட்டுமே பத்திர பதிவு செய்ய முடியும்.மேற்கண்ட சேவைகள் வருவாய்த்துறை இணையதளத்தின் வழியாக பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த நான்கு நாட்களாக வருவாய்த்துறை இணையதளம் இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள் வங்கியில் கடன் பெற முடியாமலும், வேளாண் துறையில் விவசாயிகள் மானியம் பெறமுடியா மலும், வீட்டுமனை தொடர்பாக பத்திரப்பதிவு செய்ய முடியாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.இதற்காக, கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி, விபரம் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. தற்போது, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவதால், சொத்து தொடர்பான விபரங்கள் பெற முடியாமல் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.இதனை தவிர்க்க, வருவாய்த்துறை இணையதளம் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X