பொது செய்தி

தமிழ்நாடு

கனவானது நவீன மருத்துவமனை நிறைவேறிய தீர்மானம் என்னாச்சு

Added : மார் 25, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக, வால்பாறையில் மனித - வனவிலங்கு மோதல் அதிகமாக காணப்படுகிறது.பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் முகாமிடுவதால் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், சிகிச்சைக்காக வரும் தொழிலாளர்களை பொள்ளாச்சி, கோவை போன்ற அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.தொலை துார பயணத்தின் போது, சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட்களின் சார்பில் நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை கட்ட கடந்த ஆண்டு பிப்., மாதம் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது; தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒராண்டுக்கு மேலாகியும் மருத்துவமனை கட்ட எஸ்டேட் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தொழிலாளர்கள் கூறுகையில், 'குறைந்த சம்பளத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, ஆபத்து நேரங்களில் சிறந்த முறையில் சிகிச்சை பெற தரமான மருத்துவமனை இல்லை. எனவே, அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் ஒன்றிணைந்து, வால்பாறை நகரில் அனைத்து தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் நவீன மருத்துவமனை அமைக்க வேண்டும். இதற்காக தொழிற்சங்க தலைவர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X