பொது செய்தி

தமிழ்நாடு

சர்வீஸ் ரோடு அகலப்படுத்துவது எப்போது? நிலம் எடுப்பு தாமதமாவதால் சிக்கல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் இருந்து அணுகு பாலத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்துவதற்காக, இடம் அளவீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ரோடு வரிவாக்க பணி துவங்காமல் உள்ளது.கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் இருந்து அணுகுபாலத்தை ஒட்டி, மேற்கு பகுதியில் சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த பொதுமக்கள் தரப்பில் துணை சபாநாயகருக்கு கடந்தாண்டு மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, ரோட்டை அகலப்படுத்துவதற்கு தேவையான நிலத்தை எடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு, வரைபடம் தயார் செய்யப்பட்டது.அளவீடு செய்யப்பட்ட இடத்தை, 2019ம் ஆண்டு டிச. 12ல், நிலம் எடுப்பு தனி வருவாய் அலுவலர் சாந்தி, சிறப்பு தாசில்தார் தமிழ்செல்வி ஆகியோர், இடத்தை பார்வையிட்டனர்.அணுகுபாலத்தை ஒட்டி எட்டு மீட்டர் அகலத்திற்கு சர்வீஸ் ரோடு விரிவாக்கம் செய்யவதற்காக, 1,034 சதுரமீட்டர் இடம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், 355 சதுர மீட்டர் இடம் புறம்போக்கிலும், 679 சதுரமீட்டர் இடம் தனியாரிடம் உள்ளது.இந்நிலம் கையகப்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்ற பின், நிலம் எடுக்கப்பட்டு, சர்வீஸ் ரோடு அகலப்படுத்தப்படும் என, ஆய்வு மேற்கொண்டு தனி வருவாய் அலுவலர் சாந்தி தெரிவித்திருந்தார்.இதுவரையிலும், நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கவில்லை. இதனால், ரோடு விரிவாக்கம் பணி நடக்குமா என்பது கேள்விகுறியாகிவிட்டது.இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து சிரமப்பட்டு ரோட்டில் சென்று வருகின்றனர். இதற்கு விரைவில் ரோடு விரிவாக்கப் பணி துவங்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X