பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களில் நிலவிய கூட்ட நெரிசல், கொரோனா பரவல் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.பஸ்கள், ரயில்கள் இயங்காது; வாடகை வாகனங்கள், தனியார் வாகனங்களும் இயங்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளியூர்களில் தங்கி பணிபுரிவோர், சொந்த ஊர்களுக்கு திரும்பத்துவங்கியுள்ளனர். ரயில்கள் இரு நாட்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டதால், பயணத்துக்கு பஸ்களை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களில் இருந்தும் வந்த பஸ்களில் அதீத பயணிகள் கூட்டம் நிலவியது.பொள்ளாச்சியில் இருந்து, வால்பாறை சென்ற பஸ்களில், மக்கள் அடித்துப்பிடித்து ஏறிச் சென்றனர். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் திரும்பிய மக்கள், பஸ்களில் சமூக விலக்கை கடைப்பிடிக்க முடியாமல், நோய் தொற்றுக்கு அதிக வாய்ப்பளித்த பயணிகள் கூட்டத்தை கண்போருக்கு, கொரோனா பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE