பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நடவடிக்கையால் தேவைக்கு தடையிருக்காது

Added : மார் 25, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஊராட்சி பகுதியில், ஊரடங்கின் போது மக்களுக்கு அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு நேற்று மாலை, 6:00 மணி முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.ஊரடங்கின் போது, பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். தேவையான குடிநீர், மின்சாரம், அடிப்படை சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அடிப்படை வசதிகளில் பிரச்னை ஏற்பட்டால், அந்தந்த ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளரை தொடர்பு கொள்ளலாம். அவர்கள், சம்மந்தப்பட்ட துறைகளை கொண்டு, பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பர் எனவும் கூறியுள்ளனர்.எனவே, எதற்காகவும் வீடுகளில் இருந்து வெளியேறாமல், நோய் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளவும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X